இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் தற்போது பாலிவுட்டில் அகிரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.முருகதாஸ் இயக்கம் மட்டுமின்றி எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார்.

இவர் தயாரிப்பில் சமீபத்தில் வந்த படம் 10 எண்றதுக்குள்ள, இதேபோல் தனுஷ் தயாரிப்பில் அதே நாளில் வெளிவந்த படம் நானும் ரவுடி தான். இதில் 10 எண்றதுக்குள்ள முதல் நாளில் ரூ 6.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

நானும் ரவுடி தான் 2.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆனால், ஒரு இணையத்தளத்தில் 10 எண்றதுக்குள்ள ரூ 2.8 கோடி தான் வசூல் செய்ததாக கூற, அதை தனுஷ் ரீடுவிட் செய்திருந்தார். இவை முருகதாஸை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Loading...