நடிகர்-இயக்குனருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை- சூர்யாவிற்கு அடித்த யோகம்

சூர்யா
சூர்யா

சூர்யா அஞ்சான், மாஸ் படங்களின் தோல்வியால் தற்போது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் விக்ரம் குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் இவர் நடிக்க சம்மதித்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. பொங்கலுக்கு 24 படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றது.

இப்படம் முதலில் விக்ரம் தான் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம், பிறகு இயக்குனருக்கும், விக்ரமிற்கு ஏற்பட்ட பிரச்சனையால் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே நிற்க, சூர்யாவிற்கு கதை பிடித்துபோக, அவரே நடிக்க சம்மதித்து விட்டாராம்.

Loading...