இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன், ஹுமா குரேசி, நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மும்பை டானாக வரும் ரஜினிகாந்த்துடன் ஒரு நாய் காட்சி அளிக்கிறது. இது தெருவில் வளரும் நாட்டு நாய் வகையைச்சேர்ந்தது.

இதை வளர்ப்பவர் புற சென்னையில் தெருவில் கண்டெடுத்து இந்த படத்தில் நடிக்க டிரைனிங் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்ததையடுத்து இந்த நாயை ரூ.2 கோடி வரை கொடுத்து வாங்க வெளிநாட்டில் சிலர் தயாராக இருக்கிறார்கள் என தகவல்கள் பரவி வருகிறது.