விஜய்யின் தூக்கத்தை கெடுக்கப் போகிறார் வரலட்சுமி சரத்குமார்.

நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று எல்லாம் வரலட்சுமி சரத்குமார் அடம்பிடிப்பதே இல்லை. படப்பிடிப்புக்கு வந்தால் பந்தாவும் செய்வது இல்லை.

இந்த காரணங்களால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் விரும்பும் நடிகையாக உள்ளார் வரலட்சுமி.

வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தாலும் சிரித்தபடியே சம்மதம் சொல்கிறார் வரலட்சுமி. விஷாலின் சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய வரலட்சுமிக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர். விஜய் 62 படக்குழுவோ முக்கிய அறிவிப்பு வெளியிட்டு வரலட்சுமிக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து எடுத்து வரும் விஜய் 62 படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலட்சுமியின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது.

வில்லியாக நடித்தால் என் இமேஜ் என்னாவது என்று வரலட்சுமி கவலைப்படுவது இல்லை. கிடைக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அதனால் தான் நடிகர்கள், இயக்குனர்கள் விரும்பும் நடிகையாக உள்ளார்.