வரலட்சுமி அறிமுகமான மதகஜராஜா இன்னும் வெளியாகவில்லை. ஆனால் போடா போடி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார் வரலட்சுமி. ஆரம்பத்தில் படங்கள் இல்லாவிட்டாலும் விஷாலுடன் கிசுகிசுக்கள் பரவவே லைம்லைட்டிலேயே இருந்தார்.

தாரை தப்பட்டை படம் ஓடவில்லை என்றாலும் வரலட்சுமியின் சூறாவளி நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த பெயரைத் தக்க வைக்க ஹீரோயினாகத்தான் என்றில்லை எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பேன் என்று இறங்கி வந்திருக்கிறார்.

சண்டக்கோழி 2 வில் விஷாலுக்கு வில்லியாக நடிப்பவர் இப்போது விஜய்க்கும் வில்லியாகி இருக்கிறாராம். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தில் வரலட்சுமிக்கு முக்கிய வேடமாம்.

இரண்டு படங்களிலுமே கீர்த்தி சுரேஷ்தான் ஹீரோயின். வில்லி, குணச்சித்திரம் என்று எதுவாக இருந்தாலுமே வரலட்சுமிக்கு ஸ்கோர் பண்ணக்கூடிய கேரக்டர்கள்தானே… எனவே கீர்த்தி சுரேஷுக்கு செம கடுப்பாம்.

இனிமே கதை கேட்கும்போது கவனமா இருக்கணும். நம்ம கேரக்டர் மட்டும் கேட்காம முழுக்கதையையும் சொல்லச் சொல்லணும் என்றெல்லாம் தனக்குள் பல சபதங்கள் எடுத்து வருகிறாராம் கீர்த்தி சுரேஷ்.