நயன்தாரா தற்போதெல்லாம் சோலோ ஹீரோயின் படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க சம்மதிக்கின்றார்.

இந்நிலையில் தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தின் சிங்கிள் ட்ராக் நேற்று வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தின் கதை என்னவென்றால் ‘நயன்தாரா ரங்கோலி கோலம் போடுவதில் மிகவும் ஆர்வமுள்ளவர், அப்படி ஒருநாள் யதார்த்தமாக ஒரு போட்டிக்கு செல்ல, அங்கு பெரிய கடத்தல் ஒன்று நடக்கின்றது.

இதில் நயன்தாரா மாட்டிக்கொள்ள, அதிலிருந்து எப்படி தன் புத்தியை பயன்படுத்தி வெளியே வருகின்றார்’ என்பதே கதை என கூறப்படுகின்றது.

மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சி சாட்டிலைட் இப்படத்தின் ரைட்ஸ் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.