பிரபல நடிகை சமந்தா தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது விஷாலுடன் ‘இரும்புத்திரை’, சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’, விஜய்சேதுபதியுடன் ‘சூப்பர் டீலக்ஸ் மற்றும் நடிகையர் திலகம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகை சமந்தா தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது விஷாலுடன் ‘இரும்புத்திரை’, சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’, விஜய்சேதுபதியுடன் ‘சூப்பர் டீலக்ஸ் மற்றும் நடிகையர் திலகம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா, இவர்கள் இருவரும் சேர்ந்து ‘யே மாய சேசவே’, ‘மனம்’ மற்றும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய தெலுங்குப் படங்களில் ஒன்றாக நடித்தனர்.

ஒன்றாக நடித்தபோது இருவரும் காதலில் விழுந்தனர். பின்னர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்கள் இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இந்நிலையில் இவர்களது இந்து முறை மற்றும் கிறிஸ்தவ முறை திருமணம் கடந்த வருடம் அக்டோபர் 6-ம் மற்றும் 7-ம் தேதி நடைபெற்றது.

இதில் 2014-ம் ஆண்டு ரிலீஸான ‘ஆட்டோ நகர் சூர்யா’ படம்தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம். அதன்பிறகு எந்தப் படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வில்லை. தற்போது இவர்கள் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

இந்த புதிய படத்தை ‘நின்னுகோரி’ படத்தை இயக்கிய ஷிவ நிர்வனா இயக்குகிறார். ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. முழுக்க முழுக்க ரொமான்ஸ் படமான இந்த படத்தில் திருமணம் செய்து கொண்ட நாகசைதன்யா மற்றும் சமந்தா ஜோடி நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமிலும், நாகசைத்தன்யா தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்து உறுதிபடுத்தியுள்ளார்கள்.

சமந்தா நடிப்பில் தற்போது ‘இரும்புத்திரை’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. அத்துடன், ‘சீம ராஜா’, ‘நடிகையர் திலகம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘யு டர்ன் ரீமேக்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது. இன்னும் பெயரிடப்படாத இந்த படம் நாகசைத்தன்யாவின் 17-வது படமாகும். மேலும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.