நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் ஒருவரின் மனைவிக்கு உதவி செய்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் சமத்துப் பிள்ளை என்றால் அது காஜல் அகர்வால் தான். ஹீரோக்கள் எவ்வளவு லேட்டாக வந்தாலும் கோபப்படாமல் பொறுமையாக காத்திருந்து நடித்துக் கொடுப்பார்.

இந்த பொறுமையினாலேயே அவர் பல ஹீரோக்களுக்கு பிடித்த நடிகையாக உள்ளார்.

தெலுங்கு பட இயக்குனர் சீனு வைட்லாவின் மனைவி ரூபாவுக்கு காஜல் உதவி செய்துள்ளார். ரூபா ஆரோக்கியமான உணவுகளை விற்கும் வியாபாரத்தை துவங்கியுள்ளார்.

முதல் கட்டமாக அவர் வேதிக் என்ற பெயரில் பசும்பாலை விற்கத் துவங்கியுள்ளார். இது குறித்து அறிந்த காஜல் அகர்வால் வேதிக் பாலை தாமாக முன்வந்து விளம்பரம் செய்து கொடுத்துள்ளார்.

காஜல் அகர்வால் தக்க சமயத்தில் செய்த உதவிக்காக ரூபா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இனி வரும் காலத்தில் பல நல்ல பொருட்களை அறிமுகம் செய்து வைக்க உள்ளார் ரூபா.

காஜல் அகர்வால் க்வீன் படத்தின் ரீமேக்கில் பிசியாக உள்ளார். காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவர் குடும்பத்தார் ஆவலாக உள்ளார்களாம்.