சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்கும் அறிமுக நாயகிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் பல கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்கும் அறிமுக நாயகிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் பல கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த தொல்லைகள் குறித்து நடிகைகள் தைரிமயமாக வெளியில் கூற வேண்டும், அப்போது தான் குற்றங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து நாயகி ரகுல்பீரீத் சிங் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

“வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக கூறப்படுவது உண்மையல்ல. அப்படி எந்த தவறும் திரைப்பட உலகில் நடப்பதில்லை.
கடந்த 4 ஆண்டுகளாக நான் சினிமா துறையில் இருக்கிறேன். எனக்கு இதுவரை அதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டது இல்லை” என தெரிவித்துள்ளார்.

ரகுல்ப்ரீத் சிங்கின் இந்த கருத்துக்கு தெலுங்கு நடிகை மாதவி லதா எதிர்பு தெரவித்து தனது கருத்தினை பதிவுசெய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்… “வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பது வழக்கமாக தான் உள்ளது. இவ்வாறு இல்லை என ரகுல்ப்ரீத் தெரிவிப்பது தான் ஏற்க தக்கதாக இல்லை. உன்மையை கூறினால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை இழந்துவிடுவோம் என அவர் மறைக்கின்றார்” என குற்றம் சாட்டியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் இரண்டு நாயகிகளின் இந்து வாக்குவாதம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!