எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும் புரளிகளும் வதந்திகளும் திரையுலகில் ஓய்வதே இல்லை. அதிலும் பாகுபலி 2 -ஐப் பற்றி ஓயாத புரளிகள்.

ஒவ்வொரு முறையும் இயக்குநர் ராஜமௌலியே மறுத்தும் கூட, இந்த அக்கப்போர்கள் தொடர்கின்றன. பாகுபலி 2 படம் தொடங்கும் முன்னமே, இந்தப் படத்துக்கு மூன்றாம் பாகம் தயாராவதாகச் சொன்னார்கள். அது தவறான செய்தி என்று இயக்குநர் தெரிவித்துவிட்டார்.

அடுத்து மாதுரி தீக்ஷித் நடிக்கிறார், அதுவும் அனுஷ்காவுக்கு அக்காவாக என்று நேற்றெல்லாம் ஒரு திரி பற்றிக் கொண்டிருந்தது. இன்று அதையும் பொய் என்று ராஜமவுலி சொல்லிவிட்டார்.

அனுஷ்காவுக்கு அக்கா பாத்திரமே இல்லை என்கிறார் அவர். இன்றைய புரளி… பாகுபலி 2-ல் கவுரவ வேடங்களில் ஸ்ரேயாவும் சூர்யாவும் நடிக்கிறார் என்பது. சூர்யா நடிக்கிறார் என்ற செய்தியை சூர்யாவே முன்பு மறுத்திருந்தார்.

அடுத்து ஸ்ரேயா என்ன சொல்லப் போகிறாரோ!