அறிமுக ஹீரோ சூரஜ் பாஞ்சாலியுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று நடிகை எமி ஜாக்சனைப் பற்றி செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான எமியின் கைகளில் தற்போது விஜய்59, தங்கமகன் மற்றும் எந்திரன் 2 ஆகிய படங்கள் உள்ளன. இதனால் எமியின் மதிப்பானது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் பாலிவுட் படங்களில் நடித்து வரும் எமிக்கு பாலிவுட் மிகவும் பிடித்துப் போய்விட்டதாம்.

என்ன காரணம் என்று விசாரித்தால் எல்லாம் சூரஜ் பஞ்சோலியின் அன்புதான் காரணம் என்கிறார்கள். சமீபத்தில் அக்சய்குமாருடன் எமி இணைந்து நடித்த சிங் இஸ் பிலிங் படத்தைப் பார்க்க சூரஜை பெர்சனலாக அழைத்திருக்கிறார் எமி ஜாக்சன்.
மேலே சொன்னவற்றை விட ஹைலைட்டான விஷயம் இதுதான் அன்பு அதிகமானதில் சூரஜின் வீட்டிற்கு பக்கத்திலேயே குடி வந்துவிட்டாராம் எமி ஜாக்சன்.

சூரஜ் பஞ்சோலி, எமி ஜாக்சன் இரண்டு பேரின் வாழ்க்கையிலும் முந்தைய காதலானது கறுப்புப் பக்கங்களால் நிறைந்திருக்கிறது. பாலிவுட் நடிகை ஜியா கான் ஒருநாள் தனது வீட்டு படுக்கையறையில் இறந்து கிடந்தார்.

இதற்கு சூரஜ் தான் காரணம் என்று அவரைக் கொத்தோடு அள்ளிக் கொண்டுபோய் லாடம் கட்டியது மும்பை போலீஸ். அதன் பின்னர் சிபிஐயிடம் கைமாறிய இந்த வழக்கில் பெயிலில் வெளியே வந்தார் சூரஜ்.

இதே போல எமியும் இந்திப் படங்களில் நடித்தபோது பாலிவுட் நடிகரும், மாடலுமான பிரதீக் ஜெயினை விரும்பினார். இருவரும் தங்களது கைகளில் மற்றவரின் பெயரை பச்சை குத்திக் கொள்ளும் அளவிற்கு இந்த காதல் வளர்ந்தது.

எதற்கும் ஒரு முடிவு உண்டு என்பதுபோல இந்தக் காதலும் ஒரு வருடத்தில் முடிந்து போக லண்டனுக்கே திரும்பி சென்றார் எமி. தற்போது எல்லாம் சுபமாக போய்க் கொண்டிருக்கையில் மீண்டும் காதல் வசப்பட்டிருக்கிறார் எமி.

இந்தக் காதலாவது லண்டன் பொண்ணுக்கு கைகூடுமா? பார்க்கலாம்.

Loading...