தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய்க்கு அதிக அளவில் மாஸ் உள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்க வேண்டும் என பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். மெர்சல் படத்தை அடுத்து அட்லி அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை இயக்குனர் அட்லி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தரிசனம் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-

அஜித் மற்றும் விஜய்யுடன் இணைந்து புதிய படம் எடுக்கம் திட்டம் உள்ளதா என்று நிருபர்கள் கேட்டதற்கு நிச்சயமாக உண்டு என்று அவர் தெரிவித்தார்.