லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கல்யாண சிக்னல் கொடுத்துள்ளார்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை அனைத்து முக்கிய நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார். இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இடம் பெற்ற கல்யாண வயசு பாடல் வீடியோ அண்மையில் வெளியானது.

இதில் அவரிடம் காமெடி நடிகர் யோகி பாபு கல்யாணம் பற்றி பேசுவது போல சில உரையாடல்களும் இருக்கும். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதை 1 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.

முன்னதாக, ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் வெளிநாடுகளில் சுற்றித் திரிகின்றனர். இருவருக்கும் ரகசியமாக நிச்சயாதார்த்தமும் நடந்ததாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து, இருவருக்கும் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்யாண வயசு பாடல் வீடியோ பார்த்த விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்..! ”நேக்கு கல்யாண வயசு வந்திடுத்து டி” என பதிவிட்டுள்ளார். தற்போது இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களை வைரலாக பரவி வருகின்றது.