வேதாளம் படத்துக்கு பிறகு தயாரிப்பாளர் ஏ. எம் ரத்னம் இளம் இயக்குனர்களை வைத்து 2 படங்களை தயாரிக்க உள்ளார்.

அந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் விக்னேஷ் சிவன். இவரின் நானும் ரவுடி தான் படம் பெருவாரியான மக்களை கவர்ந்துள்ளதால் படம் வசூல் வேட்டை செய்தது. இதன் அடிப்படையிலே விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் ரத்னம்.

மேலும் இவர்கள் இணையும் படத்துக்கு சிவகர்த்திகேயனை கதாநாயகனாக தேர்வு செய்துள்ளனர். ஆனால் இன்னும் சிவாவிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவித்துள்ளனர்.