கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் ஐஸ்வர்யா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் ஐஸ்வர்யா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்கள் கிடப்பில் உள்ளன. எப்போது இப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்ப்புகள் நிறைந்து ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தனது ஒன்றாக ஒரிஜினல்ஸ் மூலம் தனி பாடல்களை இயக்கி வருகின்றார்.

இந்த பாடல்களுக்கு பின்னணிப் பாடகரான கார்த்திக் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல் எழுத, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிவருகின்றார். இதுவரை இரண்டு பாடல்கள் இந்தக் கூட்டணி வெளியிட்டுள்ளது.

முதலில் வெளியான ‘கூவை’ பாடலை, சின்னப்பொண்ணு பாடியிருந்தார், அவரே அப்பாடலிலும் நடித்து இருந்தார். அவருடன் இணைந்து நடன இயக்குநர் சதீஷ் மற்றும் குழுவினர் நடனமாடியிருந்தனர்.

இரண்டாவதாக வெளியான ‘உலவிரவு’ பாடலை கார்த்திக் பாடினார், இப்பாடலில் டொவினோ தாமஸ், டிடி இருவரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மூன்றாவது பாடலாக ‘போதை கோதை’ என்ற பாடலை வெளியிட இருப்பதாக இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். இந்தப் பாடலில் நடிகர் முரளியின் மகன் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடித்துள்ளனர். விரைவில் இந்தப் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.