நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக தளபதி62 படத்தில் நடித்து வருகிறார். விஜய்யோடு அவர் ஜோடி சேர்வது இது இரண்டாவது முறை என்பதால் ரசிகர்கள் படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று விஜய்62 படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு போட்டோஷூட் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

அந்த போட்டோவில் விஜய்யின் கால் மீது கீர்த்தி கால் வைத்திருப்பது போல உள்ளது. அதனால் கோபமான விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். புகைப்படம் வெளியான கொஞ்ச நேரத்தில் மீம்கள் அதிகம் பரவி வருகின்றன.