விஜய் படம் என்றாலே எப்போதும் ரசிகர்களிடம் ஒரு சந்தோஷம் துள்ளிக்குதிக்கும். ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டவர்.

இந்நிலையில் இவரின் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளிவரும் நிலையில், தளபதியின் ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியாகிவிட்டனர்.

நேற்றே படத்தின் டைட்டில் ‘வேறலெவல்’, ‘ஷார்ப்’ என பல தகவல்கள் உலா வந்தது, ஆனால், அவை அனைத்தும் பொய் தான்.

நமக்கு கிடைத்த தகவலின்படி அரசியல் சார்ந்து தான் படத்தின் டைட்டில் இருக்கும், பெரும்பாலும் ‘அதிகாரம்’ சம்மந்தப்பட்டதாக டைட்டில் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.