சர்கார் தளபதி விஜய்யின் அடுத்தப்படத்தின் டைட்டில். இதை அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

ரசிகர்களை இதை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வர, பர்ஸ்ட் லுக்கில் மறைந்திருக்கும் சில குறியீடுகளை பார்ப்போம்.

விஜய் இதற்கு முன் துப்பாக்கி படத்தின் பர்ஸ்ட் லுக்கில் தான் சிகரெட் பிடிப்பது போல் இருந்தார், தற்போது சர்கார் படத்திலும் இது தொடர்கின்றது.

இந்நிலையில் விஜய் உருவம் பல பில்டிங்கிற்கு நடுவே இருப்பது போல் தெரிகின்றது, கத்தியில் கார்ப்ரேட் அரசியல் பற்றி பேசினார் முருகதாஸ்.

அதேபோல் தான் இதிலும் ஒரு கார்ப்ரேட் அரசியல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இதில் அரசியல்வாதிகளுடன் விஜய் மோதவது போல் தெரிகின்றது.

ஏனெனில் சர்கார் என்பது அரசாங்கத்தை குறிக்கும், அரசங்காத்தை கேள்வி கேட்கும் ஒரு பத்திரிகையாளராக கூட விஜய் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கண்டிப்பாக துப்பாக்கி, கத்தியை தொடர்ந்து சர்க்காரும் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.