நடிகை நயன்தாரா முன்னணி நட்சத்திரமாக வளம் வருகிறார், ஹீரோக்களுக்கு இருக்கும் ரசிகர்கள் வற்றம் இப்போது ஒரு நடிகைக்கு இருக்கிறது என்றால் அது நயன்தாராவுக்கு மட்டும் தான்.

கவர்ச்சியை ஓரங்ககட்டிவிட்டு தரமாக கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான அறம் படம் இவர்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

அந்த வகையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்தில் நடிக்கிறார். இந்த கதையும் கதாநாயாகிக்கு முக்கியத்துவம் தருகின்ற படம் போலதான் தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற கல்யாண வயசு பாடல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து அனைவரையும் ஈர்த்தது.

தற்போது இப்படத்தில் நயன்தாரா காசுக்காக கஞ்சா விற்கும் பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக உள்ள நயன்தாரா இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் இவரது காதலரான விக்னேஷ் சிவன் அனிருத் இசையில் முதன்முதலாக ஒரு பாடலை பாட இருக்கிறாராம். எங்கே போனாலும் தனது காதலருக்கென ஒரு வேலையை பிடித்து விடுகிறார் என கோலிவுட்டில் பேசி கொள்கின்றனர்.