நடிகர் விஜய் சர்கார் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துவருகிறார். படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் படக்குழு விரைவில் அமெரிக்கா சென்று படம்பிடிக்கவுள்ளது.

இந்நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ தான் இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. பேரரசு, தீரன் வினோத், மோகன்ராஜா உள்ளிட்ட பலர் கதை சொன்ன நிலையில் விஜய் அட்லீக்கு ஓகே சொல்லி இருப்பதாக நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.

இந்த படத்தை ஏஜிஎஸ் அல்லது சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.