கமல்ஹாசன்-கௌதம் மேனன் கூட்டணியில் வெளிவந்தவேட்டையாடு விளையாடு படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது மீண்டு இருவரும் இணைய வாய்ப்பு அமைந்துள்ளது.

ஆம், சமீபத்தில் கௌதம், கமல்ஹாசனை சந்தித்து ஒரு கதையை கூறினாராம், கமலுக்கு அந்த கதை மிகவும் பிடித்துவிட்டதாம்.

ஆனால், இந்த முறை விருமாண்டி ஸ்டைலில் கிராமத்து கதையாம், சக்கரை பொங்கலுக்கு வடைகறியா? என்பது போல் கௌதம் முதன் முதலாக கிராமத்து கதையை கையில் எடுத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.