ஸ்ரீரெட்டி அவரின் நடிப்பு திறனை காட்டட்டும் என ராகவா லாரன்ஸ் விடுத்த சவாலை ஏற்றார் நடிகை ஸ்ரீ ரெட்டி!

தெலுங்கு திரையுலகில் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் திரைதுறையை சார்ந்தவர்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்.

தமிழ் லீக்ஸ் (#tamilleaks) என்ற ஹேஸ்டேக் மூலம் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் விஷால் மற்றும் நடிகரும், நடன மாஸ்டரான ராகவா லாரன்ஸ் ஆகியோர் குறித்து புகார்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் பற்றி அவர் புகார்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று நடிகர் லாரன்ஸ் ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு வழங்க நான் தயாராக இருக்கிறேன். அவரின் நடிப்பு திறனை திரையில் அவர் காட்டட்டும் என சவால் விட்டிருந்தார். இந்நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி அந்த சவாலை ஏற்றுக்கொண்டதாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், அவர் நான் நடிகர் ராகவா லாரன்ஸ்-ன் சவாலை நான் ஏற்றுகொள்கிறேன். அனைவரும் எண்ணெய் வாழ்த்துங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும், நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகர் ராகவா லாரன்ஸ்-க்காக ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.