அட்லீ-விஜய் மூன்றாவது முறையாக இணைகிறார்கள் என்றே தகவல் ரசிகர்களுக்கு குஷி தான். AGS நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படம் குறித்து வேறு எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

ஆனால் அவ்வப்போது சில விஷயங்கள் படம் குறித்து வெளியாகிய வண்ணம் உள்ளது.

தற்போது படத்தின் இசையமைப்பாளர் குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பிரபலத்தின் பெயர் அடிபடுகிறது. அது வேறுயாரும் இல்லை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் என்று தான் கூறப்படுகிறது.

மெர்சலில் தளபதியை ரசிக்க வைத்த ரகுமான் சர்காரிலும் கலக்க இருக்கிறார். இதற்கு நடுவில் அடுத்த படத்தின் இசையமைப்பாளரும் ரகுமான் தான் என்கின்றனர்,