நடிகை சமந்தா பாடகி சின்மயிக்கு நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு என்று பிசியாக இருக்கும் நடிகை. அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த சீமராஜா திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து ஆதியுடன் யூ டர்ன் என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியுடன் சமந்தா நடித்துள்ளார்.

பாடகி சின்மயிக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சமந்தா. அதில் நிறைய அழகு சாதன பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்து இதுதான் தேவையானது. மிக்க நன்றி சின்மயி எனக் கூறுகிறார். அந்த இன்ஸ்டா வீடியோவை பதிவிட்டு ரசிகர் ஒருவர் சின்மயியை டேக் செய்துள்ளார்.

ஏன் சமந்தா சின்மயிக்கு நன்றி கூற வேண்டும் என்றால் அந்த அழகுசாதன பொருட்களை சின்மயி சமந்தாவுக்காக பிரத்யேகமாக தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளார். அதனால் தான் இந்த நன்றி தெரிவிக்கும் வீடியோ.

பாடகி சின்மயி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்தால் அழகு சாதன பொருட்கள் தொடர்பாக பல விஷயங்களை பகிர்வார்.

அந்த வகையில் சமந்தாவின் ஸ்கின்னுக்கு ஏற்ற சில அழகுசாதனப் பொருட்களை பரிசாக அனுப்பியுள்ளார் சின்மயி. அதனால்தான் சமந்தா உள்ளம் மகிழ்ந்து சின்மயிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.