முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழில் தமன்னா கைவசம் ஒரு படம் மட்டுமே உள்ளது. உதயநிதி நடிப்பில் கண்ணே கலைமானே படத்தில் மட்டுமே அவர் நடித்துவந்தார்.

நடிகர் விஷால் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.

இதற்குமுன் கத்திசண்டை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இது இவர்கள் இணையும் இரண்டாவது முறை.