நடிகை சமந்தா தொடர்ந்து நல்ல படங்ளையே தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல டாபி ஹீரோ படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

இந்நிலையில் அடுத்து சமந்தா ஒரு படத்தில் மூதாட்டியாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தெலுங்குப் பெண் இயக்குனரான நந்தினி ரெட்டி இயக்கவுள்ள இந்த படம் ‘மிஸ் கிரானி’ என்ற படத்தின் ரீமேக்காம்.

70 வயது மூதாட்டியாக நடிக்க சம்மதித்து இருப்பது தேசிய விருது வாங்க வேண்டும் என்ற ஆசையில் தான் என விமர்சனங்களும் எழுந்துள்ளது.