நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புது படத்தில், காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் சகலகலா வல்லவன், இதில் இவருக்கு ஹீரோயினாக நடிப்பதாக காஜல் அகர்வாலின் பெயர் அடிபட்டது. ஆனால் அப்போது சில காரணத்தால், காஜல் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் பிரதீப் என்பவரின் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

காஜல் அகர்வால், ஜெயம் ரவி

காஜல் குயின் படத்தின் தமிழ் ரீமேக், பாரிஸ் பாரிஸ் படங்களின் ஷூட்டிங்கை முடித்து அடுத்த பணிகள் ஈடுபட்டு வருகிறார். தவிர, மூன்று தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடுத்த ஒப்பந்தமாகியுள்ளார்.