அட்லீ டைரக்ஷனில், விஜய்-சமந்தா நடித்து, எஸ்.தாணு தயாரித்து வரும் ‘தெறி’ படத்தில், நடிகை மீனாவின் 4 வயது மகள் நைனிகா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறாள். விஜய்-சமந்தா தம்பதியின் மகளாக அவள் வருகிறாள்.

படத்தில், விஜய்-சமந்தா-நைனிகா சம்பந்தப்பட்ட இனிமையான ஒரு பாடல் இடம்பெறுகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். பிரபு-ராதிகா சரத்குமார் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டைரக்டர் மகேந்திரன் வில்லனாக நடிக்கிறார்!