சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் சினிமா நடிகர்கள் அவர்களின் பங்குக்காக நன்கொடை கொடுத்து வருகின்றனர்.

நடிகைகள் சார்பில் ஏற்கனவே ஹன்ஷிகா , ஸ்ரீதிவ்யாலட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்துள்ளனர். இந்நிலையில் கோடியில் சம்பளம் வாங்கும் நயன்தாரா இன்னமும் சும்மா இருக்கிறாரா, சுனாமி நிவாரண நிதியில் முதல் ஆளாக கொடுத்தவர் ஆச்சே என்று கேள்வி எழும்பி வருகிறது.

விசாரித்து பார்த்ததில் நயன் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நிவாரண நிதியை கொடுக்க உள்ளாராம், அவரது அழைப்புக்காக காத்திருக்கிறாம். நடிகர்கள் எல்லாம் நடிகர் சங்கத்தில் கொடுக்கும் போது முதலமைச்சரிடம் ஏன் கொடுக்க வேண்டும் அப்படியானால்நடிகர் சங்கத்தை அவர் நம்பவில்லையா என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.