தமிழ் சினிமாவின் உச்சத்தை நோக்கி செல்கிறார் சிவகார்த்திகேயன். தொட்டதெல்லாம் ஹிட் தான். அந்த வரிசையில் வரும் பொங்கலுக்கு இவருடைய நடிப்பில் ரஜினி முருகன் வெளிவருகின்றது.

தற்போது இவர் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக காலை 4 மணிக்கே நடிகர் சதீஸுடன் சிவகார்த்திகேயன் புல்லட்டில் சென்னை உலா வந்துள்ளார்.

இதுக்குறித்து சதீஸ் கூறுகையில் ‘படப்பிடிப்பிற்கு அனைவரும் காரில் செல்ல, சிவகார்த்திகேயன் தான் தன்னை புல்லட்டில் வரும்படி கூறினார்.

அதிகாலை 4 மணிக்கு செம்ம குளிர் நான் நடுங்கிவிட்டேன், ஆனால் சிவகார்த்திகேயன் செம்ம ஜாலியாக வண்டி ஓட்டினார். பின் ஒரு டீக்கடையில் இறங்க, பலரும் எங்களை கண்டு போட்டோ எடுத்துக்கொண்டனர்.

பின் டீக்கடை உரிமையாளர் இன்னும் சிறிது நேரத்தில் 2 பஸ் வரும் சார் என கூற, ரைட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு கிளம்பிவிட்டோம்’ என அவர் கலகலப்பாக கூறியுள்ளார்.