அஜித் தன் சமீபத்திய படங்கள் அனைத்தும் ஏ.எம்.ரத்னத்திற்கு தான் தயாரிக்கும் வாய்ப்பை வழங்கினார். இந்நிலையில் அஜித் அடுத்து சத்யஜோதி நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி அஜித்தின் அடுத்த படத்தை சுரேஷ் பாலாஜி தான் தயாரிக்கவுள்ளாராம்.

இவர் அஜித்தின் பில்லா-2 படத்தின் தயாரிப்பாளர், அப்படம் தோல்வியடைந்தாலும் அஜித்தை நம்பி மீண்டும் அவர் தயாரிக்கவிருப்பது அனைவருக்கும் ஆச்சரியம் மட்டுமில்லாமல் அஜித்தின் தற்போது மார்க்கெட்டையும் நிரூபித்துள்ளது.