உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்க உள்ள படத்துக்கு கெத்து என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அவருக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்க உள்ளாராம்.

உதயநிதி தற்போது நண்பேன்டா படத்தில் நயன்தாரா உடன் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அகமது இயக்கும் இதயம் முரளி படத்தில் உதயநிதி நடிக்கவிருக்கிறார் என்பது ஊரறிந்த விசயம்.

இதயம் முரளி படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். காமெடி ரோலில் தம்பி ராமையா நடிக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.

இதனிடையே உதயநிதி மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை திருக்குமரன் இயக்க உள்ளார். இவர், சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடித்த மான் கராத்தே படத்தை இயக்கியவர்.

படத்திற்கு கெத்து என்கிற தலைப்பை சூட்டியிருக்கிறார்கள். ‘மைனா’ சுகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

amy-jack

நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதியே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

நண்பேன்டா, இதயம் முரளி படங்களைத் தொடர்ந்து உதயநிதி இந்தப் படத்தில் நடிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.