ஒரு இயக்குனருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் அது சில பேருக்கு மட்டுமே சாத்தியம். ஆந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த கரோகோஷத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் இயக்குனர் செல்வராகவன். இவரின் பல படங்கள் ரசிகர்களின் என்றுமே பார்க்க தவறாத படங்களாக இருக்கும்.

அந்த வகையில் செல்வராகவன் கதை, திரைகதையில் அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “மாலை நேரத்து மயக்கம்”. இப்படம் ஒரு இளம் தம்பதிகளின் நுணக்கமான வாழ்க்கையை மையபடுத்தி எடுக்கப்பட்ட படம்.

இப்படம் அடுத்த வருடம் 2016ம் ஜனவரி 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் இளைஞர்கள் அனைவரும் இப்படத்தை புது பொலிவுடன் அடுத்த ஆண்டின் சினிமாவின் தொடக்கமாக வரவேற்க முடிவு செய்துள்ளனர் .