தனுஷ் அடுத்து கொடி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைகாக்கிசட்டை, எதிர் நீச்சல் இயக்குனர் துரை செந்தில் இயக்கவுள்ளார்.

இவரின் கடந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர், மேலும், தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரும் கூட.

இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக நேற்று நாம் தெரிவித்தோம், அதை நிரூபிக்கும் பொருட்டு கொடி படத்திற்கு அனிருத்தை கழட்டிவிட்டு, சந்தோஷ நாரயணனை இசையமைப்பாளராக கமிட் செய்து விட்டது படக்குழு.

அனிருத் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளிநாட்டில் பரபரப்பாக தன் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.