விஜய்-அஜித் அவர்கள் நண்பர்களாக தான் இருக்கிறார்கள், ஆனால், ரசிகர்கள் எப்போதும் மோதிக்கொண்டே தான் இருப்பார்கள். இதற்கு முற்று புள்ளி வைக்க விஜய்யும், அஜித்தும் இணைந்து ஒரு பேட்டி கொடுத்தாலோ அல்லது அறிக்கை விட்டாலோ போதும்.

ஆனால், அவர்கள் அதை இன்று வரை செய்ய மறுக்கிறார்கள். தற்போது விக்ரம் மூலமாக இவர்கள் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது.

விக்ரம் இயக்கும் சென்னை வெள்ளம் குறித்த ஆல்பத்தில் விஜய், அஜித்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் நல்ல செய்தி வருகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.