தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இன்று வெளிவந்த ரஜினி முருகன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இந்நிலையில் இவர் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கலந்துக்கொண்ட போது, விஜய்-அஜித்திடன் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என கேட்டனர்.

அதற்கு அவர் ‘கண்டிப்பாக ஒரு கமர்ஷியல் ஹீரோவாக வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு விஜய் சார் தான் ரோல் மாடல், எனக்கு அப்படி தான், அதேபோல் ஒரு உதவியை யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டும், முடிந்தளவு நம்மால் இயன்ற அளவு இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை அஜித் சாரிடம் என்று கற்றுக்கொண்டேன்’ என கூறியுள்ளார்.