சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் 2.O. இப்படத்திற்கான படப்பிடிப்புகள் அவ்வப்போது நடந்துவரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வந்துள்ளது.

ரூ.350 கோடியில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வரும் லைகா புரடொக்ஷன்ஸ் இந்த படத்தை 2017ம் ஆண்டு பொங்கல் திருநாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்ட நாயகன் ஷங்கர் இயக்கும் இந்த படம் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதும் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார் என்பதும் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.