பாயும் புலி’ படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். விஷ்ணு விஷால் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். மஞ்சிமா மோகன் ஹீரோயின். மலையாளத்தில் ‘வடக்கன் செல்ஃபி’ படத்தில் நடித்துள்ள இவர், தற்போது ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.

இதுபற்றி உதயநிதி கூறும்போது, ‘சுசீந்திரன் சொன்ன லைன் பிடித்திருந்தது. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றதால், படத்துக்கு உடனே பூஜை போட்டுவிட்டோம். இன்னும் முழு கதை முடிவாகவில்லை. இப்போது ‘மனிதன்’ படத்தில் நடித்து வருகிறேன். இதன் ஷூட்டிங் முடிய இன்னும் ஒரு மாதம் ஆகும். அதற்குப் பிறகுதான் அந்தப் படத்தில் நடிப்பேன். அனேகமாக மார்ச் மாதம் ஷூட்டிங் தொடங்கும்’ என்றார்.