விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளிவந்த ‘கில்லி’ திரைப்படம், விஜய்யின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத ஒரு படம். சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தின் ரேஸ் த்ரில்லர் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் இதேபோன்ற ஒரு ரேஸ் த்ரில்லரை மீண்டும் ‘விஜய்-60’ படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்த விஜய்-60 படக்குழுவினர், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் அனைவரும் ஒன்றாக விஜய்யை சந்திக்க திட்டமிட்டதாகவும், அது தற்போது நிறைவேறியுள்ளதாகவும் கூறினர்.

விஜய்க்கு ஜோடியாக முதன்முதலாக கீர்த்திசுரேஷ், மற்றும் ‘கத்தி’க்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் சதீஷ் ஆகியோர் மட்டுமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர்களுடைய பெயர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.