லண்டன் இறக்குமதி எமி ஜாக்ஸனுக்கு பாலிவுட், கோலிவுட்டில் பாய்பிரண்ட் அதிகம். லண்டனிலும் அவருக்கு பாய்பிரண்ட் உள்ளனர்.

அவர்களுடன் அடிக்கடி டேட்டிங் செய்கிறார். தமிழ் நடிகையாக இருந்தாலும் நைட் கிளப், பார்ட்டி என்று மேற்கத்திய கலாச்சாரத்துக்கு டாட்டா சொல்லாத எமி, உடை விஷயத்திலும் ரொம்பவே தாராளம்.டு பீஸ், டாப்லெஸ் என பிரபல மும்பை இதழுக்கு போஸ் தந்திருக்கிறார். எமிக்கு 2 முறை காதல் ஏற்பட்டு அது கைகூடாமல் பிரேக்அப் ஆனது.

இப்போதைக்கு அவர் அதிகம் நேசிப்பது தான் செல்லமாக வளர்க்கும் போப்லோ நாய்குட்டிதான். குளிரில் நடுங்காமலிருப்பதற்காக சமீபத்தில் அதற்கு சுவட்டர் வாங்கி அணிவித்து செல்லம் கொஞ்சினார்.அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ‘என்னுடைய போப்லோ பார்க்க அழகாக இருக்கிறதா?’ என்று கேட்டிருக்கிறார் எமி.