நடிகைகள் சினேகா மற்றும் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் தாயாகப் போகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கரால் பாய்ஸ் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா, தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.

பின்னர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். 2012-ல் இவர்கள் திருமணம் நடந்தது.

ஜெனிலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனை ரிதேஷ் தேஷ்முக் அறிவித்துள்ளார்.

கர்ப்பமாக இருப்பதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ஜெனிலியா தவிர்த்து வருகிறார். படங்களிலும் நடிப்பதில்லை. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இதுபோல் சினேகாவும் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. சினேகாவுக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் 2012-ல் திருமணம் நடந்தது. ஆனால் இதுகுறித்து சினேகாவோ, பிரசன்னாவோ எதுவும் தெரிவிக்கவில்லை.

Loading...