தமிழ் சினிமாவில் 2016ல் அனைத்து ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் பாடல் ஆல்பம் கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா பட பாடல்கள் தான்.

இப்படத்தின் ஒரு பாடலான தள்ளிப் போகாதே இப்போது அனைத்து இளைஞர்களின் ரிங் டோன் என்று சொல்லலாம்.

படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் ஆடியோ வெளியீடு மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்பட பாடல்களுக்கான டிராக் லிஸ்டை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கௌதம் மேனன்.