இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தின் ரிலிஸில் பிஸியாகவிருக்கின்றார். ஆனால், இவர் நடிப்பில் கடைசியாக வந்த புலி பெரும் நஷ்டத்தை அடைந்தது.

இதன் காரணமக விநியோகஸ்தர்கள் இவரிடமும், தயாரிப்பாளர் செல்வகுமாரிடமும் நஷ்ட ஈடு கேட்டு வருகின்றனர்.

போக்கிரிராஜா படத்திற்காக கொஞ்சம் தள்ளிப்போட்ட இந்த பேச்சு வார்த்தை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இதில் விஜய், தாணு, செல்வகுமார் இதில் யாரவது தலையிட்டு இந்த பிரச்சனையை முடித்து வைக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், நஷ்ட ஈடாக பல கோடி வரை அவர்கள் கேட்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.