விக்ரம் குமார் இயக்கிவரும் 24 படத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இவருக்கு ஐந்து விதமான கெட்டப் உள்ளதாம். இந்த மூன்று வேடங்களில் ஒரு வேடம் வில்லன் வேடம் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான்.

இந்த வில்லன் வேடத்துக்காக நடிகர் சூர்யா தனது குரலை மாற்றி டப்பிங் பேசியுள்ளாராம். படம் வெளியானதும் இது ரசிகர்களை வெகுவாக கவரும் என இயக்குனர் விக்ரம் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 24 படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.