பி.வாசுவின் மகன் சக்தி காதல் முதல் ஆக்ஷன்வரை பல வேடங்களில் நடித்துப் பார்த்தும் எதுவும் அமையவில்லை. வாசு கன்னடத்தில் இயக்கிய சிவலிங்கா படத்தில் சக்தி இரண்டாவது நாயகனாக நடித்தார். படம் அங்கு ப்ளாக் பஸ்டர். ரஜினியும் படத்தைப் பார்த்து பாராட்டினார். ரஜினிக்கு படம் பிடித்ததால் சிவலிங்காவை சந்திரமுகி இரண்டாம் பாகமாக ரஜினியை வைத்து இயக்க மெகா பிளான் போட்டார் வாசு. ஆனால், ரஜினி அதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால், ராகவா லாரன்சை வைத்து சிவலிங்காவை தமிழில் எடுக்க திட்டமிட்டுள்ளார். சந்திரமுகி 2 என்ற பெயரில் இப்படம் தமிழில் எடுக்கப்பட உள்ளது.

முக்கியமான விஷயம், கன்னடப் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த சக்தி தனது அதே வேடத்தை தமிழிலும் நடிக்க உள்ளார்.