சுறா தொடங்கி தெறி வரை தொடர்ந்து 10 முறை ‘யூ’ சான்றிதழைக் கைப்பற்றி நடிகர் விஜய் சாதனை படைத்திருக்கிறார்.

ஒரு படம் யூ சான்றிதழ் பெற்றால் அப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் பார்க்கலாம். மேலும் படத்தின் மொத்த பட்ஜெட்டில் 30% தமிழக அரசின் வரிவிலக்கும் கிடைக்கும்.

இதனால் இன்றைய இயக்குநர்கள் பலரும் யூ சான்றிதழைக் குறிவைத்தே பெரும்பாலும் படம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 10 வது முறையாக யூ சான்றிதழைக் கைப்பற்றி விஜய் சாதனை படைத்திருக்கிறார். சுறா, காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி, தலைவா, ஜில்லா, கத்தி, புலி வரிசையில் தற்போது தெறியும் இணைந்துள்ளது.

தொடர் தோல்விகளால் தவித்த விஜய்யை கைதூக்கிவிட்டதில் காவலன், வேலாயுதம், நண்பன் போன்ற படங்களுக்கு முக்கிய இடமுண்டு. இதில் சுறா, தலைவா, ஜில்லா, புலி, படங்கள் வசூலில் சொதப்ப துப்பாக்கி, கத்தி படங்கள் 100 கோடியை வசூலித்து பிளாக்பஸ்டர் படங்களாக மாறின. மேலும் விஜய்யின் 50 வது படம் என்ற பெருமையுடன் வெளியான சுறா மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. கத்தி, தலைவா, புலி இந்த 3 படங்களும் விஜய்யை அதிகம் சிக்கலுக்குள்ளாக்கிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ தொடர்ந்து 10 முறை யூ சான்றிதழைப் பெற்றது, விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைதான்..