ஓ காதல் கண்மணி வெற்றிக்கு பிறகு மணிரத்னம் பழைய உற்சாகத்துடன் தன் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.

இப்படத்தை வழக்கம் போல் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் நிறுவனம் வாங்கியுள்ளது.

இப்படத்தில் முதன் முறையாக மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் கைக்கோர்க்கவுள்ளார்.