அஜித்-முருகதாஸ் நீண்ட இடைவேளைக்கு பிறகு கூட்டணி அமைக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன் கூறப்பட்டது. இதுக்குறித்து விசாரிக்கையில் தற்போது ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தையில் தான் இருக்கிறார்களாம்.

ஆனால், முருகதாஸ் ஏற்கனவே முழு திரைக்கதையையும் ரெடி செய்துவிட்டாராம். மகேஷ் பாபு படம் முடிந்தவுடன் தொடங்கும் என கூறப்படுகின்றது.

மேலும், இதில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், பட்ஜெட் ரூ 100 கோடி வரை இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது. எந்த அளவிற்கு இந்த செய்தி உண்மை என்று தெரியவில்லை, ஆனால், நடந்தால் சந்தோஷம் தானே…!.