அஜித் எப்போதும் தன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொள்ள மாட்டார். ஆனாலும் இவர் படங்களின் வசூலுக்கு எந்த பாதிப்பு வரப்போவதில்லை.

இதை தெளிவாக தெரிந்துக்கொண்டு தான் இப்படியெல்லாம் செய்து வருகிறார் என பலரும் கூறுகின்றனர்.

ஆனால், அஜித் சில வருடங்களுக்கு முன் நீங்கள் ஏன் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்வது இல்லை என கேட்க, ‘நாம் வளரும் போது காதுகளை மூடிக்கொள்ள வேண்டும், வளர்ந்த பிறகு வாயை மூடிக்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார். அவர் என்ன நினைத்து சொன்னாரோ, அதில் உள்ள ஆழமான தத்துவம் தற்போது பலருக்கும் புரிந்திருக்கும்.