ரஜினி, கமல், அஜித், விஜய் இந்த வரிசையில் இருப்பவர்கள் சிம்பு, தனுஷ்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு அச்சம் என்பது மடமையடாபடத்திலும், தனுஷ் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் நடித்து வருகின்றனர்.

தற்போது தனுஷ் படத்தின் படப்பிடிப்புகளை துருக்கியில் எடுத்து வருகிறார் கௌதம் மேனன். இந்நிலையில் அதே இடத்தில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் ஒரு பாடலை அங்கு படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

ஒரே இடத்தில் சிம்பு, தனுஷ் படப்பிடிப்பு நடக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.